கும்பகோணம் பகுதியில் உள்ள பாணபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் மற்றும் திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் ஆகிய மூன்று சிவன் கோயில்களில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 29-ம் தேதி மூன்று கோயில்களிலும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மே 30-ம் தேதி பாணபுரீஸ்வரர் சுவாமிக்கு காவிரி ஆற்றிலும், தேனுபுரீஸ்வரருக்கு திருமலைராஜன் ஆற்றிலும், முல்லைவனநாதருக்கு வெட்டாற்றிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.