கும்பகோணத்தில் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவர் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநர் பங்குத்தந்தை டி. தேவதாஸ் கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நடத்தி மறையுரை வழங்கினார். இதயா மகளிர் கல்லூரி, விடுதி, கன்னியர் இல்லம் கன்னியர் ஆகியோர் 'கிறிஸ்தவ வாழ்வின் வழிகாட்டி நம் புனிதர்' என்ற தலைப்பில் பேசினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி ஜூன் 12-இல் நடைபெறுகிறது. ஜூன் 13-இல் திருப்பலி முடிவுற்று கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜி. கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தையர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.