கும்பகோணத்தில் நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை விவசாயிகள் தரையில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் இயக்க வேண்டும், சாக்குப்பை பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், மேட்டூர் அணை நீர் நிறுத்தப்பட்டதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி