கும்பகோணம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (60) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் விக்னேஷை சுவாமிமலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து நடந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளைத் தடுக்கக் கோரி உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து கலைத்தனர்.

தொடர்புடைய செய்தி