கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டிற்கு கத்தரிக்காய் வரத்து குறைந்ததன் காரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காயின் விலை ஒரே நாளில் ரூ. 50-ல் இருந்து ரூ. 80-ஆக உயர்ந்துள்ளது. மேலும், மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.