இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் அதன் பிறகு செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு
முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவை ஒருங்கிணைக்கிறார்களா என்று தெரியவில்லை எல்லாருமே ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர்கள்தான் அதிமுகவை ஒருங்கிணைய வேண்டும். திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை,
தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் கொலைகளை செய்பவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் காரணம் கஞ்சா கலாச்ஞாரமாக மாறிவிட்டது வேலைவாய்ப்பு இல்லை. அதனால் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.