கும்பகோணம்: சோழன் மாளிகையில் திமுக சார்பில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அருகே சோழன் மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் 102வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக மேற்கு ஒன்றியம் திரு இருதய ஆண்டவர் பொது மருத்துவமனை திரு இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் எஸ் கே முத்து செல்வம் தலைமையில் நடைபெற்றது. 

இதில் ஒன்றிய பொருளாளர் இளங்கோ, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தேவி இளங்கோ, நெசவாளர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் தங்கவேல், கல்லூரி நிர்வாகி ஆலிஸ் பிரான்சஸ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த முகாமில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, கண் மருத்துவம், இதய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள். மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வயதானவர்கள், பெண்கள் என கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி