இதையொட்டி கடந்த 6ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலை 10: 30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2: 30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
பின்னர் பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3: 40 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.