கும்பகோணத்தில் பால்குடம் காவடி எடுத்து வந்த பக்தர்கள்

கும்பகோணத்தில் மோதிலால் தெருவில் உள்ள ஸ்ரீ சப்த மாதா பீடாஹாரிணி அம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு வசந்த மஹோத்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள். 

கும்பகோணத்தில் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குவது வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் வரம் தருபவர் இவளே மோதிலால் தெருவில் உள்ள ஸ்ரீ சப்தமாதா பீடாஹாரிணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வசந்த மஹோத்சவம் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அதுபோல இவ்வாண்டு 46 ஆம் ஆண்டு மஹோத்சவத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி கணபதி ஹோமம், அம்பாள் மூல மந்திரம் ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று மகாமகம் குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, வேல், காவடி, பால்குடம், அலகுகாவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 

அதைத் தொடர்ந்து மாலை சந்தனக்காப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரமேஷ், மற்றும் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி