தஞ்சை: விக்கிரவாண்டிதேசிய நெடுஞ்சாலை திறப்பதற்கு முன்பாகவே விரிசல்

தஞ்சாவூர் முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோமீட்டருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு தனியார் ஒப்பந்தத்தாரர்கள் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. 

முதல் பிரிவாக விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தூரத்திற்கும், 2-ம் பிரிவாக சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம்-சோழபுரம் வரை 50.480 கி.மீ நீளத்திலும், 3-ம் பிரிவுகளாகச் சோழபுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புளியந்தோப்பு வரை 47.835 கி.மீ நீளத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. 

95 சதவீத பணிகள் முடிவடைந்து டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சோதனை அடிப்படையில் அந்த சாலை திறக்கப்பட்டுள்ளது. இதில் கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பொதுப்போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் சோதனை அடிப்படையில் தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் புதிய சாலையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்தும், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கியும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி