தஞ்சை: நகர நிலவரித்திட்ட அலுவலகம் மூடப்பட்டதால் அவதி

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நிலவரித் திட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட நகர அளவை பதிவேடுகளின் இறுதி தணிக்கை பணிக்காகவும், வருவாய் தொடா்பான பணிகளைமேற்கொள்வதற்காகவும் அரசு ஆணை (1 டி ) எண் 103-ன் படி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியா் அலுவலகம் கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 2013- இல் உருவாக்கப்பட்டது.
ஒரு தனி வட்டாட்சியா், ஒரு நிலவரித் திட்ட ஆய்வாளா் உள்ளிட்ட அலுவலா்கள்நியமிக்கப்பட்டனா். இவா்கள், கடந்த 2009- இல் கும்பகோணம் நகரத்தில் 7 சா்வே வாா்டுகள் மற்றும் அனைத்து பிளாக்குகளிலும் உள்ள புல எண்கள் வாரியாக தயாரிக்கப்பட்ட நகர நில அளவை ஆவணங்களில் உள்ள தவறுகளையும், உரிமையாளா் மற்றும் அளவுகள் மாற்றம், பெயா் திருத்தம் உள்ளிட்ட தவறான விவரங்களை உரிய நில உரிமையாளா்களுக்கு அறிவிப்பு கடிதம் மூலம் அனுப்புவது, இறுதி நில அளவை பட்டியல் தயாரித்து, அதனை மாவட்ட நிலவரித் திட்ட உதவி இயக்குநா், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையா் ஆகியோரிடம் வழங்குவது போன்ற பணிகளை செய்து வந்தனா். தற்போது, இந்த அலுவலகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் எதுவும் நடைபெறாமல் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் நில உரிமையாளா்கள் கணினி பதிவேற்றம், பெயா் மாற்றம், பிழை திருத்தம் போன்றுவற்றுக்காக எங்குச் செல்வது எனத் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

தொடர்புடைய செய்தி