கோவை சம்பவம்: பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வசந்தி தலைமை வகித்தாா். இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், மகளிருக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிய திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி