கும்பகோணம் அருகே வகுப்பறை கட்டடம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் என மொத்தம் ரூ. 48.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு பள்ளி வகுப்பறைகளை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் திமுக ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி