தஞ்சாவூரில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் குடும்ப திருமண விழாவை நடத்தி வைத்து, கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச. ராமநாதன் சிலைகளைத் திறந்து உரையாற்றுகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.