தஞ்சாவூர்: தவக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு

கும்பகோணம் அருகே தாராசுரம் எம்ஜிஆர் நகரில் நடந்த பிறந்தநாள் விழாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, ஜீப் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சேதமடைந்த ஜீப் உரிமையாளரும், தமிழக வெற்றிக்கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட இணைச்செயலருமான எஸ். பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் 3 பேரை கைது செய்து, மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி