கும்பகோணத்திற்கு வருகை தந்த ஆந்திர துணை முதல்வர்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கும்பகோணம் வருகை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அவரை கோவில் செயலாளர் முருகன் அறங்காவலர் குழுவினர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பிறகு, பவன் கல்யாண், கோவில் யானைக்கு செவ்வாழை பழம் கொடுத்து ஆசி பெற்றார். 

தொடர்ந்து, ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்பாள் சன்னதிகளில் அமர்ந்து தியானம் செய்து சுவாமியை வழிபட்டார். பிறகு, கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள கும்பமுனி எனும் அகத்தியர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிறகு, கோவிலில் வெளியே நின்ற கும்பகோணம் சாஸ்திர பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆந்திர மாணவர்கள், மாணவிகளுடன் கார் மூலம் நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார்.

 பிறகு அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்ற பவன் கல்யாண், தனி விமானம் மூலம் திருச்செந்தூர், மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், இன்று (14ம் தேதி) பழனி, பழமுதிர்சோலை, நாளை (15ம் தேதி) திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி