தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் துரை சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.