கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் புதிதாக அமைக்கப்பட்ட 20 அடி தார் சாலை திடீரென 3 அடி ஆழத்திற்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். தரமற்ற சாலை அமைப்பால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.