தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி புறவழிச்சாலையில் கடந்த 29-10-24 அன்று செந்தில் என்பவரிடம் வழிப்பறி செய்ததாகக் கூறப்படும் நந்தக்குமாா், சரண், சிவக்குமாா் ஆகிய மூவருக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிபதி பாலதண்டாயுதம் வெள்ளிக்கிழமை 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அருள்குமாா் விடுவிக்கப்பட்டாா்.