கும்பகோணத்திலிருந்து 2000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சம்பா சாகுபடி நெல், விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். தஞ்சை மாவட்ட சேமிப்பு கிடங்குகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் நெல் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. அதன்படி, நேற்று (16ஆம் தேதி) குடந்தை, திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாக்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 114 லாரிகளில் ஏற்றப்பட்டு, கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 55 சரக்கு ரயில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி