தஞ்சாவூர்: 2,000 டன் நெல் மூட்டைகள் சேலம் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மூலம் அறுவடையாகும் நெல், கொள்முதல் நிலையங்கள் வழியாக சேமிக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள 254 கொள்முதல் நிலையங்களில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் 116 லாரிகளில் வெள்ளிக்கிழமை கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயிலின் 42 வேகன்களில் சேலத்திற்கு அரவைக்காக அனுப்பப்பட்டது

தொடர்புடைய செய்தி