இதனால் மகாமகக் குளத்தைச் சுற்றி ஒரே நாளில் ஏராளமான குப்பைகள் சேர்ந்தன. மேலும் மழை பெய்ததால் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மகாமகக் குளத்தைச் சுற்றிக் கிடந்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாநகர நல அலுவலர் மருத்துவர் திவ்யா மேலும் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சுமார் 110 மெட்ரிக் டன் குப்பை தேங்கியது. ஆணையர் அறிவுறுத்தலின்படி குப்பையை அகற்றி மகாமகக் குளத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்து சீரமைப்பு செய்யப்பட்டது என்றார்.