தஞ்சாவூர் கேஎஃப்சி உணவகத்தில் ஏசி வெடித்த விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரேசன், பிரேம்குமார், கணேசன் மற்றும் அருண்குமார் ஆகிய நால்வருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.