சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் IPL 2026 போட்டிகளில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், அவர் சென்னையில் உள்ள NSG கமாண்டோ மையத்திற்கு திடீர் விசிட் மேற்கொண்டுள்ளார். பிராந்திய மையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடிய தோனி, அவர்களுடன் இணைந்து துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது தனது உடல்நிலையை குறிப்பிட்டு, "நான் ஃபிட்டாக இருக்கிறேன் அல்லவா?" என்று அவர் நகைச்சுவையாக கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.