பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து: ஜவுளித்துறை வரவேற்பு

ஜவுளித்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஜூன் 1 முதல் அக்டோபர் 30 வரை அமலில் இருக்கும் இந்த வரி நீக்கத்தால், உள்நாட்டு சந்தையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பருத்தி தடையின்றி தாராளமாக கிடைக்கும். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ஜவுளி மற்றும் ஆடைத் தயாரிப்புத் துறையில் உற்பத்திச் செலவுகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி