டெட் தேர்வு: ஹால்டிக்கெட் பதிவிறக்க புதிய வழி

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை (நவ.15) மற்றும் நாளை மறுநாள் (நவ.16) நடைபெற உள்ளன. தாள்-1 தேர்வுக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், தாள்-2 தேர்வுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், விண்ணப்பத்தின்போது பதிவு செய்த செல்போன் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி