நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியடைந்தது. புனேவில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 359 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் சுழலில் சிக்கி 245 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் டெஸ்டிலும் தோல்வியடைந்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என இழந்துள்ளது. கடைசி டெஸ்ட் நவ.1 அன்று மும்பையில் தொடங்குகிறது.