மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில், கெப்பி மாநிலத்தில் பயங்கரவாதிகள் 7 கிராமங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 33 பேரை கொன்றனர். கால்நடைகளை திருடும் நோக்கில் லகுராவா என்ற ஆயுதக்குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. பல வீடுகள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதியில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.