ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம் நேற்று ‘ஆபரேஷன் பிம்பிள்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. குப்வாரா, கேரன் செக்டார் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி