காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் நிலையில், இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி