மதுரை வெங்கலமூர்த்தி நகரில் திமுக முன்னாள் நிர்வாகி வீ.கே.குருசாமியின் ஆதரவாளரான காளிஸ்வரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என குருசாமியின் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். காளிஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, சிவகங்கை, மதுரை என கடந்த ஒரு வாரத்தில் 5-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.