சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூராண்டி புதூரில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். மேலும், லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். லாரிகள் மோதிக்கொண்ட விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: குமுதம்