அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், சர்வதேச வர்த்தகத்துக்கு மிக முக்கியமான ஏமன் அருகிலுள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த நீரிணை மூடப்பட்டால், உலக வர்த்தகமும், எண்ணெய் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.