மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹர்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் உயிரிழப்புகள் குறித்து கவலையை வெளிப்படுத்திய அவர், இத்தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவித்தார். மேலும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியாக தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.