தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் பெரியதுரை என்பவருக்கு சொந்தமான புதிய வீட்டில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்யச் சென்ற ஆனந்த் என்பவர் மீது வீட்டின் மேல் பகுதியில் சென்ற 11 ஆயிரம் கிலோ வாட் கொண்ட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த ஆனந்துடன் பணியாற்றிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவர் பலத்த காயங்கள் அடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.