சங்கரன்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆட்க்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (27) என்பவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். சின்ன கோவிலாங்குளம் போலீசார் நடத்திய சோதனையில், கணேஷ் என்பவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி