குருவிகுளம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (24) என்ற இளம் பெண் இவர் கணவர் சில மாதங்களுக்கு முன்பு வேற ஒரு திருமணம் செய்து கொண்டதால் மன அழுத்தம் காரணமாக இருந்த இளம் பெண் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி