தென்காசி: சுமை தூக்கும் தொழிலாளர் மீது மூட்டை சரிந்து விழுந்து பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார். இவர் லோடு மேனாக பணிபுரிந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூட்டை தூக்கும்போது மூட்டை மேலே விழுத்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி