சிவகிரி அருகே மலையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி இந்திரா மேலத் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முருகேசன் (32). தேநீர் கடையில் வேலை செய்து வந்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அலங்கார வேலைக்கு பயன்படும் கூந்தல்பனையை வெட்டுவதற்காக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்முட்டை பகுதிக்கு அவரும் அவரது நண்பர்கள் சிலரும் சென்றனர். 

அப்போழுது மலையில் இருந்து தவறி விழுந்ததில் முருகேசன் இறந்தாராம். இது குறித்த தகவல் தெரியவந்ததை அடுத்து சிவகிரி போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று முருகேசனின் உடலை மீட்டனர். புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளர் கண்மணி, சிவகிரி வனச்சரகர் செங்கோட்டையன், வனவர் ஜெபித்தர்சிங் ஜாக்சன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி