தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (28), மகள் பவித்ரா, மகன் முகில் (10 மாதம்). இந்நிலையில், வெண்ணிலா தனது மகன் முகிலை சேர்த்துக் கட்டிக் கொண்டு, புளியங்குடியிலிருந்து மணக்குடையார் கோயில் செல்லும் சாலை அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.