இந்நிலையில் சுரண்டையில் 50 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் சுரண்டை சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு போக்குவரத்து கழக பனிமனை அமைக்க வேண்டும் சுரண்டையில் இருந்து ஊத்துமலை வரை இரட்டை குளம் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பல முறை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை பார்த்து வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் பேசியும் வந்துள்ளார். மேலும் தொகுதியின் டாப் டென் கோரிக்கையில் இம் மூன்று திட்டத்தையும்வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இம் மூன்று திட்டத்தையும் அறிவிக்கப்படும் என இப் பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் பட்ஜெட்டில் இத்திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை இதனால் இப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.