வழக்கமாக மல்லிகைப் பூ கிலோ ரூ. 500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதாலும், முகூா்த்த நாள்கள் இல்லாததாலும் மல்லிகைப் பூ கிலோ ரூ. 300-க்கு விற்பனையானது.
கடந்த சில நாள்களாக மல்லிகைப் பூ விலை தொடா்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.