தென்காசி: மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஆதிலட்சுமி, தனியாக வசித்து வருவதால் பொழுதுபோக்கிற்காக வாங்கிய ரேடியோ திருடு போனதால் மனமுடைந்து காணப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்பு திருடு போன ரேடியோ குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கடந்த திங்கட்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்நிலையில், ஹலோ எப்.எம். சார்பில் அவருக்கு நேற்று புதிய ரேடியோ வழங்கப்பட்டது. ரேடியோவைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி