தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோ. சுப்பையா தலைமை வகித்தார். இதில், துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., பங்கேற்றுப் பேசினார். கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறினார். 

இதையடுத்து தனி அறையில் கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலர் ராஜா எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் தனுஷ் எம். குமார், பி.எம். ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ச. தங்கவேலு, யு.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவரணி துணைச் செயலர் செண்பகவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி