கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாகத் தொடங்கியுள்ளது. வழக்கமாக மே மாத இறுதியில் தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது குற்றால மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இருந்தும் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.