தென்காசி: ரேடியோவ கண்டுபிடிச்சி கொடுங்க.. மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன தனது ரேடியோ பெட்டியை கண்டுபிடித்து தரக்கோரி, மூதாட்டி ஆதிலட்சுமி (95) ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார். சிந்தாமணியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருட்டு போன தனது ரேடியோ பெட்டி குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், காவல்நிலையத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி