தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தாம்பூர் வடகரை கீழ்ப் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது. அப்போது, பாலத்தின் அருகே நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. சாம்பவர் வடகரை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.