தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ மாஸ்டர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே இருக்கும் டீக்கடையில் வேலை செய்யும் டீ மாஸ்டரான முகமது இஸ்மாயிலிடம் (44) விசாரணை செய்தனர். இதனையடுத்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முகமது இஸ்மாயில் அனைத்து மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி