செங்கோட்டை: லஞ்சம் வாங்கிய முன்னாள் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை

செங்கோட்டையைச் சேர்ந்த செண்பகராஜ் என்பவர், கற்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஜல்லிக்கற்களை லாரியில் கொண்டு செல்ல அனுமதி கோரி, அப்போதைய செங்கோட்டை வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணியிடம் மனு அளித்தார். 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், லஞ்சம் கொடுக்க விரும்பாத செண்பகராஜ் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. 26.11.2013 அன்று லஞ்சப் பணத்தை வாங்கியபோது ஸ்டெல்லா எஸ்தர் ராணி கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி