வாசுதேவநல்லூர் அருகே பள்ளி வேன் விபத்து.. 8 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மற்றும் அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எட்டுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி